காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
Published on

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்தது. அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால், வதந்திகள் பரவி வன்முறைகள் வெடிக்காமல் இருப்பதற்காக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இணையதள சேவைகளும் முடக்கப்பட்டது. முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், குலாம் நபி ஆசாத் உள்பட பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com