2ஜி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடுவது, வேடிக்கையாக உள்ளது - நிதியமைச்சர் அருண்ஜெட்லி

2ஜி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடுவது, வேடிக்கையாக உள்ளது என நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்
2ஜி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடுவது, வேடிக்கையாக உள்ளது - நிதியமைச்சர் அருண்ஜெட்லி
Published on

புதுடெல்லி

2 ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

2ஜி வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடுவது, வேடிக்கையாக உள்ளது. முறைகேடு நடந்தததால் தான் 122 உரிமைகளை ரத்து செய்தது. முந்தையகாங்கிரஸ் அரசின் கொள்கையால் நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டது உண்மையே. தீர்ப்பை நேர்மைக்கான சான்றாக எடுத்து கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக் கொள்கையை சுப்ரீம் கோர்ட் கடுமையாக விமர்சித்து இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com