அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை நிறுத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு


அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை நிறுத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு
x

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் முழு விவரம் வெளியகியுள்ளது.

புதுடெல்லி,

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிர சாரத்தின் போது ஏற் பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த னர்.இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை மையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்தும், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

இதே போல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவன் பிருதிக்கின் தந்தை பன்னீர் செல்வம், பாத்திமா பானு வின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோர் இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி பா.ஜனதா தரப்பிலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசா ரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி நடை பெற்றது. இந்த மனு, நீதி பதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா ஆகி யோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

கரூரில் கூட்ட நெரிச லுக்கு பிறகு போலீசார் கட்டாயப் படுத்தியதால்தான் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கரூரில் இருந்து விஜய் தப்பி ஓடவில்லை.இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தர விட வேண்டும் என்று வாதிட்டனர்.இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் பல் வேறு கேள்விகளை எழுப்பி தீர்ப்பை 13-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தனர்.இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (திங்கட் கிழமை) நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் தீர்ப்பு கூறினார்கள்.

அதில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசா ரணை நடத்த உத்தர விட்ட னர்.மேலும் சி.பி.ஐ. விசா ரணையை கண்காணிப்ப தற்காக சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத் தும் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த தீர்ப்பின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசு அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. முன்னதாக மூத்த வழக்கறிஞர் வில்சன், அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தொடரும் என்று கூறியிருந்தார்.

1 More update

Next Story