அருணாசல பிரதேசத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா

அருணாசல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா
Published on

இடாநகர்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 54,752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 54,061 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 414- ஆக உள்ளது. அருணாசல பிரதேசத்தில் தொற்று மீட்பு விகிதம் 98.74 சதவிகிதமாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com