

இட்டாநகர்,
இமாச்சலபிரதேசத்தில் பெய்த திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 5 பேர் மாயமாகினர்.
இமாச்சலபிரதேசத்தின் கெயி பன்யொர் மாவட்டத்தில் இன்று திடீரென கனமழை பெய்தது. கனமழை காரணமாக திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி போஷா பகுதியை சேர்ந்த 5 பேர் மாயமாகினர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மாயமான 5 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.