குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் சுற்றுப்பயணம்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக குஜராத் செல்கிறார்.
குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் 2 நாள் சுற்றுப்பயணம்
Published on

புதுடெல்லி,

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது. இதேபோல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதன்படி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதனையடுத்து, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ளார்.

மேலும், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படும் என மேலும் ஒரு வாக்குறுதியை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, வருகிற 12 மற்றும் 13-ம் தேதி ஆமதாபாத் நகருக்கு செல்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com