அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர்: நீதிபதியை விலக கோரிய வழக்கு

சி.பி.ஐ. தரப்பு 'கோர்ட்டு என்பது நாடகங்களுக்கான களம் அல்ல நீதிபதி விலகல் மனுவை எதிர்க்கிறோம் கெஜ்ரிவால் குற்றச் சாட்டுகள் அற்பமானவை என்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர்: நீதிபதியை விலக கோரிய வழக்கு
Published on

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை மோசடி வழக்கில் இருந்து குற்றம்சாட் டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி சுவர்ணா காந்தா சர்மாவை விலக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறி இருந்தார். ஆனால் இந்த கருத்தை கோர்ட்டு நிராகரித்து இருந்தது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார். அப்போது சி.பி.ஐ. தரப்பு 'கோர்ட்டு என்பது நாடகங்களுக்கான களம் அல்ல நீதிபதி விலகல் மனுவை எதிர்க்கிறோம் கெஜ்ரிவால் குற்றச் சாட்டுகள் அற்பமானவை. அவமதிப்புக்குரியவை. 7 பேர் நீதிபதி விலக கோரி உள்ளனர்' என்று வாதிட்டது.

அப்போது 'வேறு யாராவது மனு தாக்கல் செய்ய விரும்பினால் தயவு செய்து செய்யுங்கள், அப்போதுதான் நான் அதை ஒருமுறைக்கு ஒருமுறை முடிவு செய்ய முடியும்' என்று நீதிபதி ஷர்மா கூறினார். மேலும் அவர், கெஜ்ரிவால் முறையீடு மனு வருகிற 13-ந்தேதி விசாரணைக்கு பட்டியலிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com