டெல்லி சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
டெல்லி சட்டசபை தேர்தல்: ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி,பாஜக, காங்கிரஸ் இடையே கடும் பொட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ்- ஆம் ஆத்மி தனித்தனியே போட்டியிடுவதால் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமாயான வார்த்தை மோதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டெல்லியில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார்.

ராகுல் காந்தி கூறுகையில், " முதல்வராக இருந்த கெஜ்ரிவால் டெல்லியில் ஊழலை ஒழித்தாரா? மோடியை போலவே கெஜ்ரிவாலும் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளார்" என்று விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், ராகுல் காந்தி நாட்டிற்காக போராடவில்லை. தனது கட்சியை காப்பாற்ற போராடி வருகிறார்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com