அரவிந்த் கெஜ்ரிவால் அடிபணிய மாட்டார்: பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்

கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்திருப்பது பாஜகவின் உத்தரவின்பேரில் அது செயல்படுவதை அப்பட்டமாக காட்டுகிறது என்று பஞ்சாப் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் அடிபணிய மாட்டார்: பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்
Published on

சண்டிகார்,

டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதையடுத்து அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை முறைப்படி கைது செய்ய அனுமதி கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதை ஏற்றுக்கொண்டு நீதிபதி அமிதாப் ரவத் அனுமதி அளித்தார். அதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை முறைப்படி சிபிஐ கைது செய்தது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதுதொடர்பாக பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"கெஜ்ரிவாலின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த படம் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை பிரதிபலிக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் கொடுமைப்படுத்தினாலும் அரவிந்த் கெஜ்ரிவால் அடிபணியமாட்டார். அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் கிடைத்த பிறகு, கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்திருப்பது பாஜகவின் உத்தரவின்பேரில் அது செயல்படுவதை அப்பட்டமாக காட்டுகிறது. விசாரணை அமைப்பின் விண்ணப்பத்தின் மீதான வாதங்களை கேட்டபின் டெல்லி முதல்-மந்திரி குற்றமற்றவர்" என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com