ஏப்ரல் 1-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் முடிவடைவதையொட்டி ஏப்ரல் 1-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
Published on

புதுடெல்லி,

வருகின்ற மார்ச் 31-ம் தேதி நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஆகும். அதனால் இதையொட்டி அனைத்து துறை நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதனால், அன்று விடுமுறை விடப்பட்டால், அரசுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் இன்று (சனிக்கிழமை 30-ம் தேதி) மற்றும் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை 31-ம் தேதி), ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மார்ச் 30-ம் தேதி இரவு 8 மணி வரையிலும், மார்ச் 31-ம் தேதி மாலை 6 மணி வரையிலும், வங்கிகளை திறந்து வைத்திருக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளையும், ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் முடிவடைவதையொட்டி வரும் திங்கட்கிழமை ஏப்ரல் (1-ம் தேதி) அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுத்துறை, தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் செயல்படாது. அதேநேரத்தில், இணையதளம் மற்றும் தொலைபேசி கணக்குகள் வாயிலாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆர்பிஐ அலுவலகங்கள் செயல்படும். RTGS மற்றும் NEFT போன்ற செயலிகள் அன்றைய தினம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com