

பாட்னா,
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினுடனான கருத்து வேறுபாட்டால் நேற்று முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பாரதீய ஜனதா ஆதரவுடன் இன்று மீண்டும் முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் முதல் மந்திரியாக பதவியேற்றதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது.
நிதிஷ் குமார் நேற்று தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தது முதல் சரத் யாதவ், தற்போது வரை எந்த கருத்தையும் கூறாமல் மவுனம் காத்து வருகிறார். இன்று ஆறாவது முறையாக முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பொறுப்பேற்ற விழாவிலும் சரத் யாதவ் கலந்து கொள்ள வில்லை. இதன் காரணமாக சரத் யாவ், நிதிஷ் குமாரின் முடிவால் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.