ஏப்ரல் 30-ந் தேதி வரை 28 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா: ஆய்வில் தகவல்

ஏப்ரல் 30-ந் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் 28 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டது ஆய்வில் தெரியவந்து உள்ளது,
ஏப்ரல் 30-ந் தேதி வரை 28 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா: ஆய்வில் தகவல்
Published on

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த ஜனவரி 22-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை நடத்திய ஆய்வின் முடிவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியாகி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* ஜனவரி 22-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரத்து 184 பேரில் 28.1 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

* 25.3 சதவீதம் பேருக்கு மற்றவர்களிடம் இருந்து தொற்று பரவி இருக்கிறது.

* போதிய பாதுகாப்புடன் இல்லாததால் 2.8 சதவீத சுகாதார ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

* 50 முதல் 69 வயது வரை உள்ளவர்கள் அதிக அளவில் (63.3 சதவீதம்) பாதிக்கப்பட்டு உள்ளனர்.

* பாதிக்கப்பட்டவர்களில் 6.1 சதவீதம் பேர் 10 வயதுக்கு குறைவானவர்கள்.

* ஆண்களிடம் கொரோனா பாதிப்பு 41.6 சதவீதம் என்றும், பெண்களிடம் 24.3 சதவீதம் என்றும் உள்ளது.

* நாடு முழுவதும் உள்ள 736 மாவட்டங்களில் 523 மாவட்டங்கள் (71.1 சதவீதம்) பாதிக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com