என் சகோதரருக்காக எனது உயிரையும் தியாகம் செய்வேன் - பிரியங்கா காந்தி

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.
என் சகோதரருக்காக எனது உயிரையும் தியாகம் செய்வேன் - பிரியங்கா காந்தி
Published on

டேராடூன்,

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் 5 மாநிலங்களிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில், பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியும், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா மற்றும் மணிப்பூர் ஆகியவை பாஜக ஆளும் மாநிலங்களாகவும் உள்ளன.

முன்னதாக, பிரியங்கா காந்திக்கும் அவரது சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கும் இடையே பிளவு ஏற்படக்கூடும் என யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த பிரியங்கா, தன் சகோதரருக்காக தனது உயிரையே தியாகம் செய்ய முடியும், அதேபோல் ராகுலாலும் எனக்கு அதையே செய்ய முடியும். பாஜகவில்மோதல் உள்ளது, காங்கிரஸில் இல்லை, ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே பிளவு உள்ளது என்று பிரியங்கா கூறினார்.

இந்நிலையில், இன்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியின் போது, காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது, அதனை அழிக்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா போதும் என்றார். காங்கிரஸ் கட்சியை அழிக்க வேறு யாரும் தேவையில்லை. அண்ணன் தங்கை இருவருமே போதும், உத்தரகாண்டில் காங்கிரசை ஆதரித்து ஏன் நேரத்தை வீணடிக்க நினைக்கிறீர்கள். என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com