

லக்னோ,
லக்கிம்பூர் வன்முறை வழக்கில் முக்கியக் குற்றவாளியான மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்தநிலையில், விசாரணைக்கு ஆஷிஷ் மிஸ்ரா முழு ஒத்துழைப்பு கொடுக்காததால் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். மற்றும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்காததால் கைது செய்யப்பட்டதாக டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.