ஆசிய விளையாட்டு போட்டி: வில்வித்தை தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கும்கும் அனில் : பிரதமர் மோடி வாழ்த்து

ஷூட்-ஆப் சுற்றில் கும்கும் அனில் மோஹோட் நிதானம் மிகவும் சிறப்பாக இருந்தது என்று மோடி தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி: வில்வித்தை தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கும்கும் அனில்  : பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி
Published on: 

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை கும்கும் அனில் மொஹோத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

முதல் இந்திய பெண்

ஆசிய விளையாட்டு போட்டிகளின் ரிகர்வ் வில்வித்தை தனிநபர் பிரிவில், இந்திய வீராங்கனை கும்கும் அனில் மொஹோத் தங்க பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்த பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையை அவர் பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி பாராட்டு

வில்வித்தை வீராங்கனை கும்கும் அனில் மொஹோத்தின் இந்த சாதனையை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வாழ்த்துகள்

"என்றும் நினைவில் நிற்கும் ஒரு தங்கப் பதக்கம்! ஆசிய விளையாட்டு போட்டிகளில் ரிகர்வ் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்ற கும்கும் அனில் மொஹோத்திற்கு வாழ்த்துகள். பரபரப்பான ஷூட்-ஆப் சுற்றில் அவரது நிதானம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்! அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்."

இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள வீராங்கனை கும்கும் அனில் மொஹோத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com