ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: "100 பதக்கங்களை வென்றது இந்தியாவுக்கு பெருமை"- பிரதமர் வாழ்த்து

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 102 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி: "100 பதக்கங்களை வென்றது இந்தியாவுக்கு பெருமை"- பிரதமர் வாழ்த்து
Published on

புதுடெல்லி,

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வீரர்களின் கடின உழைப்பு, மன உறுதியால் கிடைத்துள்ள இந்த வெற்றி, ஈடு இணையற்ற மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக கூறியுள்ளார். குறிப்பிடத்தக்க இந்த மைல்கல், நம் அனைவரின் இதயங்களையும் அளப்பரிய பெருமையால் நிறைப்பதாகவும், இளைஞர்களால் சாத்தியமற்றது எதுவும் இல்லை என்பதை நமக்கு நினைவூட்டுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இதுவரை 26 தங்கம், 30 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 102 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com