

கவுகாத்தி
நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் மேற்கத்திய பகுதிகளில் வெப்ப அலை பரவி வருகிறது. அதனை எதிர்கொள்ள அவசரகால நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. வெப்ப நிலையும் அதிகரித்து காணப்படுகிறது.
அசாம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை மற்றும் மின்னல் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில், அசாமில் நேற்று கடுமையான புயல் தாக்கியது.
இதில் பல்வேறு வீடுகளும், உட்கட்டமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 31 கிராமங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. 6 விலங்குகளும் மரணம் அடைந்துள்ளன. இதேபோன்று, மின்னல் தாக்குதல்களும் நடந்துள்ளன.
கோக்ராஜர், பார்பேட்டா, கோலாகட் மற்றும் திப்ரூகார் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களில் மின்னல் தாக்கியதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.