அசாம்: நிலக்கரி சுரங்கத்தில் சூழ்ந்த வெள்ளம்; 15 தொழிலாளர்கள் நிலை என்ன?

அசாமில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெள்ளம் சூழ்ந்ததில் 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டுள்ளனர்.
அசாம்: நிலக்கரி சுரங்கத்தில் சூழ்ந்த வெள்ளம்; 15 தொழிலாளர்கள் நிலை என்ன?
Published on

கவுகாத்தி,

அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், வேலை செய்து வந்த தொழிலாளர்களில் 15 பேர் வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர்.

அவர்கள் வேலை செய்து வந்தபோது, சுரங்கத்திற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. ஒரு சிலர் சுரங்கத்தில் இருந்து தப்பி வெளியே வந்தனர். அவர்கள் சுரங்க உரிமையாளர் மற்றும் உள்ளூர் போலீசாரிடம் சுரங்க விபத்து பற்றி கூறியுள்ளனர்.

இதனை உறுதி செய்துள்ள முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, மீட்பு பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் பொறுப்பு படை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார். ராணுவ உதவியும் கோரப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இந்த சுரங்கம் நகரில் இருந்து தொலைவில், உட்பகுதியில் அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி கொண்டு சட்டவிரோத வகையில் சுரங்கம் செயல்பட்டு வந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com