தேசிய செய்திகள்
அசாமில் வெள்ளம்: 11 மாவட்டங்களில் 1.33 லட்சம் பேர் பாதிப்பு
அசாமில் கனமழை பெய்ததால் 11 மாவட்டங்களில் 1.33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கவுகாத்தி,
அசாமில் பெய்த கனமழையால் அம்மாநிலத்தில் 11 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1.33 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
11 மாவட்டங்களில் உள்ள 243 கிராமங்கள் வெள்ளத்தால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. வெள்ளத்தால் 16 சாலைகள் சேதம் அடைந்துள்ளன.

