வரும் 15-ந்தேதி முதல் அசாமில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ்..!!

அசாம் மாநிலத்தில் வருகிற 15-ந்தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கவுகாத்தி,

புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தொற்றின் எதிரொலியால் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை உருவானது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

அந்த வகையில் அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்கள் மற்றும் வணிகவளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் உறவினர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகிற 15-ந்தேதி முதல் திரும்பப்பெறப்படும் என மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

மேலும் பள்ளி பொதுத்தேர்வுகள், நகராட்சி தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவை அடுத்த 2 மாதங்களில் நடக்கும் எனவும் அவர் தெரிவித்தார். அதே சமயம் பள்ளி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும் என ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com