

கவுகாத்தி,
அசாமில் உள்ள ஓட்டலில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தியின் லசிட் நகர் பகுதியில் தனியார் ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் இன்று இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஓட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியால் ஓட்டலின் வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச்சென்றனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அதேவேளை, துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம்? துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.