அல்கொய்தாவுடன் தொடர்புடைய 5 பேர் அதிரடி கைது - அசாம் போலீசார் நடவடிக்கை

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அல்கொய்தாவுடன் தொடர்புடைய 5 பேர் அதிரடி கைது - அசாம் போலீசார் நடவடிக்கை
Published on

கவுகாத்தி,

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேரை அசாம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் ஒருவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

வங்காளதேசத்தை சேர்ந்தவர்

வங்காளதேசத்தில் பல்வேறு ஜிகாதி குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குழு ஒன்றில் முகமது சுமன் என்கிற சைபுல் இஸ்லாம் இணைந்து செயல்பட்டு வந்தார்.வங்காளதேசத்தை சேர்ந்த இவர் அசாமின் பார்பெட்டா மாவட்டத்தை சேர்ந்த சிலருடன் இணைந்து அங்கு அல்கொய்தாவுக்காக பணி செய்து வந்தார். பார்பெட்டா மாவட்டத்தை ஜிகாதி பணிக்கான தளமாக மாற்றும் பணிகளை இவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இதை மாவட்ட சிறப்பு போலீஸ் படையினர் கண்டறிந்தனர். எனவே இது குறித்து உடனடியாக பார்பெட்டா மாவட்ட போலீசுக்கு அவர்கள் ரகசிய தகவல் கொடுத்தனர்.

5 பேர் கைது

இதைத்தொடர்ந்து உடனடி நடவடிக்கையில் இறங்கிய பார்பெட்டாவின் ஹவ்லியான்ட் கல்காசியா போலீசார், நேற்று சைபுல் இஸ்லாம் உள்பட 5 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 பேரும் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com