அசாமில் இன்று மேலும் 1,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அசாமில் இன்று மேலும் 1,213 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அசாமில் இன்று மேலும் 1,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

அசாம்,

அசாமில் கொரோனா 2-வது அலைபாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், அசாமில் இன்று மேலும் 1,213 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,17,194 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,652 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,775 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,89,040 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 22,155 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com