அசாம் புதிய அரசு 12-ம் தேதி பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

அசாம் முதல்-மந்திரியாக ஹிமந்தபிஸ்வ சர்மா தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அசாம் புதிய அரசு 12-ம் தேதி பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு
Published on

கவுகாத்தி,

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 82 இடங்களை கைப்பற்றியது. அங்கு பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெற்று முத்திரை பதித்தது.

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தபிஸ்வா சர்மா மற்றும் மாநில மந்திரிகள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். புதிய அரசு வருகிற 11-ம் தேதி பதவியேற்கும் என்று தகவல் வெளியாகி இருந்தது.

இந்தநிலையில் அசாமில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய அரசு வருகிற 12-ம் தேதி பதவி ஏற்கும் என்று மாநில தலைமை செயலாளர் ரவிக்கோடா தெரிவித்துள்ளார்.

அசாம் முதல்-மந்திரியாக ஹிமந்தபிஸ்வ சர்மா தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பாஜக ஆளும் முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com