ராணுவ வீரர் படுகொலை; மைத்துனருக்கு வலைவீச்சு

பாகல்கோட்டையில் ராணுவ வீரரை படுகொலை செய்த அவரது மைத்துனரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ராணுவ வீரர் படுகொலை; மைத்துனருக்கு வலைவீச்சு
Published on

பாகல்கோட்டை:

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா நிரலகேரி கிராமத்தை சேர்ந்தவர் கரி சித்தப்பா (வயது 25). ராணுவ வீரர். இவரது மனைவி வித்யா. இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்திருந்தனர். இந்த நிலையில், விடுமுறையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கரி சித்தப்பா தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே வைத்து கரி சித்தப்பாவுக்கும், அவரது மனைவியின் சகோதரரான சித்தனகவுடாவுக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் உண்டானது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த சித்தனகவுடா தன்னிடம் இருந்த கத்தியால் கரி சித்தப்பாவை சரமாரியாக குத்தினார்.

இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கரி சித்தப்பாவுக்கும், வித்யாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால், மைத்துனர் சித்தனகவுடா, கரி சித்தப்பாவை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கெரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தனகவுடாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com