4 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்: இன்று வாக்குப்பதிவு


4 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்: இன்று வாக்குப்பதிவு
x

இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

குஜராத் மாநிலத்தில், காடி தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த கார்சந்த்பாய் பஞ்சாபாய் சோலங்கி மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதி காலியாக உள்ளது. மற்றொரு தொகுதியான விஸ்வதாரின் எம்எல்ஏ பயானி பூபேந்திர கந்துபாய், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் கேரளாவின் நிலாம்பூர் தொகுதியின் எம்எல்ஏ பி.வி. அன்வர் ராஜினாமா செய்தார். பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா தொகுதி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி கோகி மற்றும் மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் எம்எல்ஏ நஸிருதீன் அஹமது ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த 4 மாநிலங்களிலும் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 19ஆம் தேதியான இன்று இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. நேற்று முன் தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே கட்சியினர் பலரும் வாக்களிக்க வரிசையில் நின்று வருகின்றனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story