ஐ.ஐ.டி. ஜோத்பூர் இயக்குநர் மீது தாக்குதல் நடத்திய உதவி பேராசிரியர்


ஐ.ஐ.டி. ஜோத்பூர் இயக்குநர் மீது தாக்குதல் நடத்திய உதவி பேராசிரியர்
x

ஐ.ஐ.டி. ஜோத்பூர் நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்து உள்ளது.

ஜோத்பூர்,

ஐ.ஐ.டி. ஜோத்பூரில் நேற்று காலை கூட்டம் ஒன்று நடந்தது. இதில், ரசாயன பொறியியல் துறைக்கான உதவி பேராசிரியர் தீபக் குமார் அரோரா மற்றும் ஐ.ஐ.டி. ஜோத்பூரின் இயக்குநர் அவினாஷ் குமார் அகர்வால் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், இருவரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த அரோரா, திடீரென அவினாஷை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

இதுபற்றிய புகாரின் பேரில் அரோராவை போலீசார் கைது செய்தனர். எனினும், நேற்று மாலை அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால், அவரை ஐ.ஐ.டி. ஜோத்பூர் நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உள்ளது.

இதுபற்றி வெளியான தகவலில், கூட்டத்தின்போது, 5 ஆண்டுகளாக துறையில் சிறப்பாக செயல்படவில்லை என அரோராவை நோக்கி இயக்குநர் அவினாஷ் கூறினார். ஆனால் பதிலுக்கு, நீங்கள் இயக்குநர் பணியில் சேர்ந்ததில் இருந்து ஐ.ஐ.டி. ஜோத்பூர் எந்த மைல்கல்லையும் எட்டவில்லை என கூறினார். இந்த வாக்குவாதம் தகராறாக முற்றி மோதலில் முடிந்துள்ளது.

1 More update

Next Story