

புதுடெல்லி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு முன்பு வடமாநிலங்களில் அதிகரித்துவரும் கட்டபஞ்சாயத்துக்கள் தொடர்பான வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது.
'இரு வேறு சாதியினருக்கு இடையே நடக்கும் திருமணத்துக்கு எதிராக நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்களை மத்திய அரசு தடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். ஒரு ஆணும் , ஒரு பெண்ணும் அவரவரின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம். திருமண வயது வந்த ஆணும் பெண்ணும் காதல் திருமணம் செய்வதை தடுப்பது சட்டவிரோதம். சாதி மறந்து காதல் திருமணம் செய்வதை தடுக்கும் அதிகாரம் பெற்றோர், சமூகம் என யாருக்கும் கிடையாது' என்று நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர்.
#SupremeCourt #Khap Panchayats #DipakMisra