கோவிஷீல்டு தடுப்பூசியின் வீரியம் 3 மாதங்களில் குறைந்துவிடும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசியின் வீரியம் 3 மாதங்களில் குறைந்துவிடும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கோவிஷீல்டு தடுப்பூசியின் வீரியம் 3 மாதங்களில் குறைந்துவிடும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Published on

புதுடெல்லி

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும், தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் தடுப்பூசியின் பயன்பாடு குறித்து இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி, ஆஷிஸ் சையத் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள். அவர்களின் ஆய்வு முடிவுகள் தி லான்செட் பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன.

அந்த ஆய்வில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு 2 டோஸ் செலுத்தி முடித்த 3 மாதங்களில் அதன் வீரியம் குறைந்து விடுவது தெரியவந்துள்ளது.

இதே தடுப்பூசிதான் இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்குகிறது.

அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் ஸ்காட்லாந்தில் 20 லட்சம் பேரிடமும், பிரேசிலில் 4 கோடியே 20 லட்சம் பேரிடமும் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொண்ட பின்னர் 2 வாரங்களில் ஒப்பிடும்போது 5 மாதங்களான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது, இறப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் செயல்திறனில் சரிவு முதலில் மூன்று மாதங்களில் தோன்றத் தொடங்குகிறது, மருத்துவமனையில் அனுமதிப்பது மற்றும் இறப்பு ஆபத்து இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இரட்டிப்பாகும்.

இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு நான்கு மாதங்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து மற்றும் இறப்பு மூன்று மடங்கு அதிகரிக்கிறது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் தடுப்பூசிகள் ஒரு முக்கிய கருவியாகும், ஆனால் அவற்றின் செயல்திறன் குறைவது சிறிது காலமாக கவலையாக அளிக்கிறது. தடுப்பூசியின் பாதுகாப்பு எப்போது குறைவது தொடங்குகிறது என்பதைக் கண்டறிவதன் மூலம், அதிகபட்ச பாதுகாப்பு பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யக்கூடிய பூஸ்டர் திட்டங்களை அரசாங்கங்களால் வடிவமைக்க முடியும்" என்று ஷேக் கூறினார்.

சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி கூறியதாவது:-

நீங்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை இரண்டு டோஸ் எடுத்திருந்தாலும் எங்கள் பணியானது பூஸ்டர்களைப் பெறுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com