140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளை சுமந்து செல்கிறார்: சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து


140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளை சுமந்து செல்கிறார்: சுபான்ஷு சுக்லாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 25 Jun 2025 2:38 PM IST (Updated: 25 Jun 2025 4:33 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாசிப்பயறு, வெந்தயத்தை முளைக்க வைத்து சுபான்ஷு சுக்லா ஆய்வு செய்கிறார்.

புதுடெல்லி,

பல இன்னல்களை தாண்டி, பால்கன்-9 ராக்கெட் மூலம் இன்று நண்பகல் 12.01 மணிக்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது. 28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடைய உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்கின்றனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். பாசிப்பயறு, வெந்தயத்தை முளைக்க வைத்து சுபான்ஷு சுக்லா ஆய்வு செய்கிறார்.

இந்தநிலையில், இந்திய விண்வெளி வீரர் சுக்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில்,

இந்தியா, ஹங்கேரி, போலந்து, அமெரிக்க வீரர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணத்தின் வெற்றிகரமான ஏவுதலை வரவேற்கிறோம். 140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள், அபிலாஷைகளை தன்னுடன் சுபான்ஷு சுக்லா சுமந்து செல்கிறார். சுபான்ஷு சுக்லாவுக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story