ராஜஸ்தானில் பேருந்து- டிரக் மோதி பயங்கர விபத்து - 12 பேர் பலி

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
ராஜஸ்தானில் பேருந்து- டிரக் மோதி பயங்கர விபத்து - 12 பேர் பலி
Published on

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை டிரக் - பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் பலியாகினர்.

இது குறித்து பேருந்தில் பயணம் செய்த பயணி கூறியதாவது:- 36 -க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை 9:55 மணியளவில் பலோத்ராவிலிருந்து ஜோத்பூருக்கு பேருந்து புறப்பட்டது. பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது, சாலையின் தவறான பக்கத்தில் இருந்து வந்த லாரி, பேருந்து மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. லாரி மோதிய பின் உடனடியாக பேருந்து தீப்பிடித்து எரிந்து என்றார்.

12 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 22-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் எனத்தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் வழங்கப்படும் எனத்தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com