மகாராஷ்டிராவில் பள்ளி கூடம் அருகே குழாய் நீரை குடித்த 60 மாணவர்களுக்கு உடல் நல குறைவு

மகாராஷ்டிராவில் பள்ளி கூடம் அருகே குழாய்களில் இருந்து நீரை குடித்ததில் 60 மாணவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மகாராஷ்டிராவில் பள்ளி கூடம் அருகே குழாய் நீரை குடித்த 60 மாணவர்களுக்கு உடல் நல குறைவு
Published on

மும்பை,

மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் பிம்பல்தரி கிராமத்தில் பள்ளி கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு படித்து வரும் மாணவர்களில் பலர் பள்ளி கூடத்திற்கு அருகே உள்ள குழாய்களில் இருந்து வந்த தண்ணீரை குடித்துள்ளனர்.

இந்த நிலையில், தண்ணீர் குடித்த 60 மாணவர்களுக்கு வயிற்று வலி, வயிற்று போக்கு மற்றும் மயக்கம் ஆகியவை ஏற்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் 10 முதல் 12 வயதிற்கு உட்பட்டவர்கள்.

இதனை தொடர்ந்து உடனடியாக அவர்கள் தர்காவன் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 8 மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்து உள்ளது. அவர்களை லோனி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 7 மாணவர்கள் ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர்.

இதனை அடுத்து குழாய்களில் இருந்து தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com