

பெங்களூரு,
கர்நாடகத்தில் ராஜினாமா செய்துள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரில் 13 பேர் காங்கிரசையும், 3 பேர் ஜனதாதளம் (எஸ்) கட்சியையும் சேர்ந்தவர்கள். ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்களை, சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கும் நிலையில், சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.
இதனால், காங்கிரசை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தில் இன்று கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை கொறடா கணேஷ் ஹுக்கேரி உத்தரவிட்டு உள்ளார். ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க தவறினால், அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.