தேசிய போர் நினைவு சின்னத்தில் கடல், வான் தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை

தேசிய போர் நினைவு சின்னத்தில் கடல், வான் தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
தேசிய போர் நினைவு சின்னத்தில் கடல், வான் தளபதிகள் மலர்வளையம் வைத்து மரியாதை
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட இந்தியாவில் எண்ணற்றோர் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலரது வரலாறு வெளியே தெரியாமலேயே உள்ளது. அதனை வெளி கொண்டு வரும் வகையில் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டு கொண்டார். இளைஞர்களிடம் இதுபற்றிய ஆர்வம் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனினும், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் எல்லையில் பல்வேறு சவால்களை நாடு சந்தித்து வருகிறது. இந்திய விடுதலை பெற்றதில் இருந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரமிகு ராணுவ வீரர்களை கவுரவிக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 25ந்தேதி டெல்லியில் தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதன் 3வது ஆண்டு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தேசிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் படை தளபதிகள் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னம் அமைந்த பகுதிக்கு இன்று சென்றனர். இதன்பின்பு தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார், கடற்படை தளபதி ஆர். ஹரி குமார் மற்றும் விமான படை தளபதி வி.ஆர். சவுத்ரி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com