ராஜஸ்தானில் ரூ.10 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரம் கொள்ளை

ராஜஸ்தானில் ரூ.10 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

உதய்பூர்,

ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தின் தபோக் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். கிளை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் ஒன்று, அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலாளியை மிரட்டி சிறை வைத்தனர்.

பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை மொத்தமாக பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றனர். இதில் ரூ.10 லட்சம் இருந்ததாக வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் தபோக் போலீசார் வழக்கு பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com