எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை

தனியார் வங்கியின் ஏ.டி.எம். ரெயிலின் ஏ.சி. பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது
எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை
Published on

மும்பை,

இந்திய ரெயில்வேயில் முதல்முறையாக ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சோதனை முயற்சியாக ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மராட்டியத்தின் மும்பை , நாசிக் இடையேயான பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இந்த ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கியின் ஏ.டி.எம். ரெயிலின் ஏ.சி. பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தை வைப்பதற்காக ரெயில் பெட்டியில் போதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியில் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் நாட்டில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் ஏ.டி.எம். எந்திரங்களை வைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com