பஞ்சாப்பில் கொடூரம்; போதைப்பொருளுக்கு எதிராக போராடிய தன்னார்வலர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை

கடை உரிமையாளர் தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து, ஜோட்டாவை நோக்கி சுட்டுள்ளார்.
பஞ்சாப்பில் கொடூரம்; போதைப்பொருளுக்கு எதிராக போராடிய தன்னார்வலர் பட்டப்பகலில் சுட்டுக்கொலை
Published on: 

சண்டிகார்

பஞ்சாப்பில் போதைப்பொருளுக்கு எதிராக போராடிய தன்னார்வலர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தில் மருந்து கடைகளில் சட்டவிரோத வகையில் போதைப்பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடுமையாக போராடி வந்த தன்னார்வலர் பர்வீந்தர் சிங் என்ற ஜோட்டா.

இந்நிலையில், ஒரு மருந்து கடையில் சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல் அறிந்து, ஜோட்டா சிலரை அழைத்துக்கொண்டு அந்த கடைக்கு சென்றார். அந்த கடையின் உரிமையாளரிடம் அதுபற்றி கேள்வி கேட்டுள்ளார். இதனை வீடியோவாகவும் அவர் பதிவு செய்துள்ளார்.

கடை உரிமையாளர்

அப்போது, கடை உரிமையாளர் தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து, ஜோட்டாவை நோக்கி சுட்டுள்ளார். அதனை ஜோட்டா கவனித்து, கடையின் உரிமையாளர் பையில் இருந்து கைத்துப்பாக்கியை எடுக்கிறார் என்று கூறுவதும் வீடியோவில் கேட்கிறது.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்து சரிந்த ஜோட்டாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், அதில் பலனின்றி அவர் பலியாகி விட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com