காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தங்கியுள்ள இடம் அருகே தாக்குதல்

பாகிஸ்தான் டிரோன்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தங்கியுள்ள இடம் அருகே தாக்குதல்
Published on

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் ஹண்ட்வாரா மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் போர் நிறுத்த மீறி தாக்குதலை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் குப்புவாரா, பூஞ்ச்,நவ்காம், உரி ஆகிய 4 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இரவு 7 மணி முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களுக்கு உரிய, தக்க, பலமான பதிலடியை கொடுத்து வருகிறது

3-வது நாளாக இந்திய வான்வெளிக்குள் டிரோன்களை பாகிஸ்தான் ராணுவம் ஏவுகிறது. பெரோஜ்பூர் எல்லைக்கு அப்பால் இருந்தும் டிரோன்களை ஏவி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் டிரோன்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் பணியில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா தங்கியுள்ள இடம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நான் இருக்கும் இடத்திலிருந்து இடைவிடாத குண்டுவெடிப்புச் சத்தங்கள், கனரக பீரங்கிச் சத்தங்கள், இப்போது கேட்கின்றன. என தெரிவித்துள்ளார் . மேலும் , பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வரவேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார் . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com