டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

டென்மார்க் பிரதமர் மேட் பிரெடெரிக்சன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
Published on

புதுடெல்லி,

டென்மார்க் பிரதமர் மேட் பிரெடெரிக்சன் நேற்று மாலை மத்திய கோபென்ஹாகென்னில் உள்ள குல்டோர்வெட் சதுக்கத்தில் நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் பிரதமர் மேட் பிரெடெரிக்சன் அதிர்ச்சி அடைந்துள்ளார் என பிரதமர் அலுவலகம்  செய்தி வெளியிட்டது. பிரதமரை தாக்கிய நபரை கைது செய்த டென்மார்க் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய யூனியன் தேர்தல் டென்மார்க்கில் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டென்மார்க் பிரதமர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டென்மார்க் பிரதமர் மேட் பிரெடெரிக்சன் மீதான தாக்குதல் பற்றிய செய்தி அறிந்து கவலையடைந்தேன். தாக்குதலை கண்டிக்கிறோம். எனது நண்பர் நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மூன்று வாரங்களுக்கு முன்னதாக ஸ்லோவேகிய பிரதமர் ராபர்ட் பிகோ தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர், தீவிர சிகிச்சைக்குப்பிறகு உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com