ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை

துமகூருவில் ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை
Published on

துமகூரு:

துமகூரு மாவட்டம் திப்தூர் தாலுகா முச்சனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திவாகர் (வயது 32). இவர் ரவுடி ஆவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு திவாகர் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திவாகரை வழிமறித்த மர்மநபர்கள் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தாக்கி திவாகரை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திப்தூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். கொலை சம்பவம் குறித்து திப்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com