இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி; திருமணமான வாலிபருக்கு தர்ம-அடி

தீர்த்தஹள்ளி அருகே, இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற திருமணமான வாலிபரை, பொதுமக்கள் பிடித்து தர்ம-அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி; திருமணமான வாலிபருக்கு தர்ம-அடி
Published on

சிவமொக்கா;

இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி

சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா கோணந்தூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் திருமணம் முடிந்த வாலிபர், மனைவி-பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் வாலிபர், இளம்பெண் மீது மோகம் கொண்டுள்ளார்.

நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது வாலிபர் சென்று இளம்பெண்ணை, வீட்டில் இருந்து கிராமத்தின் ஒதுக்குப்புறப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து ஆசைவார்த்தை கூறி கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன இளம் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

கைது

இந்த சத்தம் கேட்டு வாலிபரின் மனைவி மற்றும் கிராம மக்கள் ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது வாலிபர், இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி, கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வாலிபருக்கு தர்ம-அடி கொடுத்தனர். மேலும் தீர்த்தஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து அவரை ஒப்படைத்தனர்.

அதன்பேரில் போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவரின் பெயரை போலீசார் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com