நள்ளிரவில் இளம்பெண்ணின் அறைக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - வாலிபர் கைது


நள்ளிரவில் இளம்பெண்ணின் அறைக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2025 4:45 PM IST (Updated: 19 Sept 2025 4:48 PM IST)
t-max-icont-min-icon

நாகரீகமற்ற முறையில் புகைப்படங்களை எடுத்ததுடன், இளம்பெண்ணிடம் ரூ.70 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 24 வயதான இளம்பெண் ஒருவர் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், அதே பகுதியை சேர்ந்த சாய்பாபு சென்னுரு என்ற வாலிபருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.

இந்த நிலையில், நள்ளிரவில் இளம்பெண்ணின் அறைக்குள் நுழைந்த சாய்பாபு, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட முயன்றபோது சாய்பாபு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

மேலும், இளம்பெண்ணின் அருகில் சென்று நாகரீகமற்ற முறையில் புகைப்படங்களை எடுத்த சாய்பாபு, அவரிடம் ரூ.70 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். தொடர்ந்து, பெண்ணின் தொலைபேசி மூலம் தனது வங்கிக்கணக்கிற்கு ரூ.14 ஆயிரம் பணத்தை மாற்றிக்கொண்ட சாய்பாபு, வெளியே யாரிடமாவது சொன்னால் புகைப்படங்களை இணையத்தில் பரப்பிவிடுவேன் என்றும், கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சாய்பாபுவை கைதுசெய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story