வாக்குவாதத்தின்போது ஆத்திரம்: பஸ் டிரைவர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் , தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாக்குவாதத்தின்போது ஆத்திரம்: பஸ் டிரைவர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து ரிஷிகேசுக்கு நேற்று அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

இந்நிலையில், ஹரித்வாரின் மொடிதூர் மேம்பாலத்தை கடக்க முயன்றபோது எதிரே வந்த கார் பஸ் மீது மோத இருந்தது. அப்போது சாதுரியமாக செயல்பட்ட பஸ் டிரைவர் விபத்து ஏற்படாமல் பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார்.

கொலை முயற்சி

பின்னர், பஸ்சில் இருந்து இறங்கிய டிரைவர் விபத்தை ஏற்படுத்த இருந்த காரை தடுத்து நிறுத்தி அதில் இருந்த டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ் டிரைவருடன் சேர்ந்து பயணிகள் சிலரும் கார் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கார் டிரைவர், பஸ் டிரைவரை நோக்கி காரை வேகமாக இயக்கி அவரை கொலை செய்ய முயற்சித்தார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக பஸ் டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதேவேளை, பஸ் டிரைவர் மீது காரை மோத முயற்சித்த கார் டிரைவர் அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் , தப்பியோடிய கார் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com