

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே நெய்யாற்றின்கரை ஒட்டசேகரமங்கலம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ.(SBI) ஏ.டி.எம். மையத்தில் இன்று காலை கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்கான இயந்திரம் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரம்(Cash Deposit Machine) ஆகியவை செயல்பாட்டில் இருந்துள்ளன.
இந்நிலையில், கொள்ளையர்கள் அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்த இயந்திரத்தை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களால் அதை உடைக்க முடியவில்லை. இதனிடையே எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பயத்தில் திருட்டு முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதனால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த ரூ.25 லட்சம் பணம் தப்பியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆரியங்கோடு போலீசார், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.