அவுரங்காபாத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி - ஓவைசி கட்சி எம்.பி. குற்றச்சாட்டு

அவுரங்காபாத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக ஓவைசி கட்சி எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
அவுரங்காபாத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி - ஓவைசி கட்சி எம்.பி. குற்றச்சாட்டு
Published on

இந்து அமைப்பு கூட்டம்

மத்திய அரசு அவுரங்காபாத் பெயரை சத்ரபதி சம்பாஜி நகர் எனவும், உஸ்மனாபாத் பெயரை தாராசிவ் என மாற்றவும் ஒப்புதல் அளித்து உள்ளது. அவுரங்காபாத்தின் பெயரை மாற்றுவதை கண்டித்து ஓவைசி கட்சியினர் கடந்த 2 வாரங்களாக கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவுரங்காபாத்தில் இந்து அமைப்பினர் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க ஓவைசி கட்சியினர் அவர்களது உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தி உள்ளனர்.

சீர்குலைக்க முயற்சி

இதுதொடர்பாக ஓவைசி கட்சியை சேர்ந்த அவுரங்காபாத் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் கூறியதாவது:-

அவுரங்காபாத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் நடக்கிறது. இந்து அமைப்பு சார்பில் அவுரங்காபாத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் பேச வெளியில் இருந்து ஆட்கள் வர உள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் வந்து பேச உள்ளனர். ஊர் பெயர் மாற்றிய விவகாரத்துக்கு மதச்சாயம் பூசும் முயற்சிகளும் நடக்கிறது. எனவே நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்தி உள்ளோம். தற்போது அமைதியை நிலைநாட்டுவது போலீசாரின் கடமை. பொதுக்கூட்டத்தில் யாரும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசாமல் இருப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். அவுரங்காபாத் பெயர் மாற்றத்துக்கு எதிராக சட்டரீதியிலும் போராடுவோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com