

புதுடெல்லி,
பொதுமக்கள் தங்களது பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நவம்பரில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
சில மாநிலங்களின் பண்டிகை விடுமுறைகள், குருநானக் ஜெயந்தி உள்ளிட்ட காரணங்களால் குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் மூடப்படலாம். இதனுடன் ஒவ்வொரு மாதமும் வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளும் வங்கி விடுமுறை நாட்களாகும்.
ஆனால், எல்லா மாநிலங்களிலும் ஒரே தேதியில் ஒரே மாதிரியான விடுமுறை இருக்காது. ஒரு மாநிலத்தில் வங்கி மூடப்பட்டிருக்கும் நாளில் மற்றொரு மாநிலத்தில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படலாம். வரும் நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் வங்கிகளுக்கு 7 நாள்கள் விடுமுறை வருகிறது.
இதில் நவம்பர் 1, 15, 22, 29ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளும், நவம்பர் 14 மற்றும் 28 ஆகிய 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளும் அடங்கும்.
மேலும் நவம்பர் 8 அன்று வரும் தீபாவளி பண்டிகையானது ஞாயிற்றுக்கிழமை யில் வருவதால், தனியாக சிறப்பு விடுமுறை எதுவும் வழங்கப்படவில்லை
நவ. 1, 8 (ஞாயிறு): நவ.9 (திங்கள்) தீபாவளி / லட் சுமி பூஜை, கோவர்தன பூஜை: அகர்தலா, போபால், சண்டிகர், கேங்டாக், இம்பால், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ ஆகிய இடங்களில் விடுமுறை.
நவ.10 (செவ்வாய்) விக்ரம் சம்வத் புத்தாண்டு / பலி பிரதிபதா: அகமதாபாத். பெங்களூர்,டேராடூன், கேங்டாக், மும்பை, நாக்பூர் போன்ற இடங்களில் வங்கி செயல்படாது.
நவ. 11 (புதன்) பாய் தூஜ் / சித்ரகுப்த ஜெயந்தி: கேங்டாக், இம்பால், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, சிம்லா போன்ற இடங்களில் வங்கி செயல்படாது.
நவ. 13 (வெள்ளி): ஷில் லாங்கில் வங்காலா திருவிழா விடுமுறை.
நவ. 14 (சனிக்கிழமை): 2வது சனிக்கிழமை நாடு முழுவதும் விடுமுறை.
நவ. 15 (ஞாயிறு): நாடு முழுவதும் விடுமுறை.
நவ.16 (திங்கள்): பாட்னா, ராஞ்சியில் சாத் பூஜை விடுமுறை.
நவ.20 (வெள்ளி): டேராடூனில் இகாஸ் பக்வால் விடுமுறை.
நவ. 22 (ஞாயிறு): நாடு முழுவதும் விடுமுறை.
நவ. 23 (திங்கள்): ஷில்லாங்கில் செங்குட்ஸ்னெம் பண்டிகை விடுமுறை.
நவ.24 (செவ்வாய்) குரு நானக் ஜெயந்தி (கார்த்திக பூர்ணிமா: புதுடெல்லி,
மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, சென்னை தவிர்த்து பல முக்கிய நகரங்களில் விடுமுறை.
நவ. 27 (வெள்ளி): பெங்களூரில் கனகதாச ஜெயந்தி விடுமுறை.
நவ. 28 (சனிக்கிழமை): 4வதுசனிக்கிழமை இந்தியா முழுவதும் விடுமுறை.
நவ. 29 (ஞாயிறு): நாடு முழுவதும் விடுமுறை.
எனவே பொதுமக்கள் தங்களது பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.