நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதில்லை - அட்டர்னி ஜெனரல்

பாபர் மசூதி தொடர்பான கருத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதில்லை என அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.
நடிகை ஸ்வரா பாஸ்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதில்லை - அட்டர்னி ஜெனரல்
Published on

புதுடெல்லி

பாபர் மசூதி தெடர்பாக சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்த பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தெடரப்போவதில்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தெடர்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியது. பலரும் இந்தத் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர். சிலர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்தனர். எப்போது சர்ச்சைக்குள்ளான கருத்துகளை தெரிவிக்கும் பழக்கமுடையவர் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர். தனியார் நிகழ்ச்சியென்றில் பங்கேற்றபோது ராமர் கோயில் தீர்ப்பு தெடர்பாக சுப்ரீம் கோர்ட்டை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது.

"எங்கள் அரசியலமைப்பை நம்பாத ஒரு அரசாங்கத்தால் நாம் ஆளப்படுகிறோம் ... நாம் நம்பாத போலீஸ் படைகளால் ஆளப்படுகிறோம். அரசியலமைப்பு ... எங்கள் நீதிமன்றங்கள் அரசியலமைப்பை நம்புகிறதா என்று உறுதியாக தெரியாத சூழ்நிலையில் நாம் இப்போது இருக்கிறோம் என்று தெரிகிறது ... " என அவர் கூறி இருந்தார்.

பலரும் ஸ்வரா பாஸ்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தெடரப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள கே.கே.வேணுகோபால் என்னுடைய நிலைப்பாட்டில் அவரின் கருத்து ஒன்றும் கிரிமினல் குற்றமல்ல.

எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கோ நடவடிக்கையோ தேவையில்லை. சுப்ரீம் கோர்ட் தான் பாபர் மசூதி இடித்ததற்கு சட்டத்துக்கு புறம்பானது என்று தன்னுடைய தீர்ப்பிலேயே குறிப்பிட்டுள்ளது என கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com