

மெல்போர்ன்
சித்தக் எனும் மாணவன் தலைப்பாகை அணிந்து கொண்டு பள்ளிக்கு வருவது அதன் சீருடைக் கொள்கைக்கு உடன்பாடானது கிடையாது என்று கூறிய நிர்வாகம் இத்தடையை விதித்தது. சித்தக்கின் பெற்றோர் இதனை எதிர்த்து முறையீடு செய்தனர். பள்ளியின் உத்தரவு சம வாய்ப்புச் சட்டத்தினை மீறி செயல்படுகிறது என்றும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.
விக்டோரியன் குடிமையியல் மற்றும் நிர்வாக தீர்ப்பாயம் பெற்றோர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. சித்தக்கிற்கு எதிராக பாரபட்சம் காட்டியுள்ளது என்றும் அது தனது உத்தரவில் கூறியுள்ளது. அது கிறிஸ்துவ பள்ளி என்றாலும் வெளிப்படையான மாணவர் சேர்க்கைக் கொள்கையை பின்பற்றுகிறது. இதனால் மாற்று மதத்தினரும் அங்கு சேரலாம் என்பதை ஏற்கிறது என்றார் தீர்ப்பாய உறுப்பினர் ஒருவர்.
பள்ளியைச் சேர்ந்தவர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் தங்களை கிறிஸ்துவர் என்று அடையாளம் காட்டவில்லை, மேலும் பலர் மத நம்பிக்கையற்றவர் என்றும் காட்டிக்கொண்டுள்ளனர் என்று கூறிய தீர்ப்பாயம் கிறிஸ்தவர் அல்லாதவர் தங்களை பிற மதத்தை பின்பற்றுவர்களாக காட்டிக்கொள்ளக் கூடாது எனக் கூறி மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை ஏற்கக்கூடாது என்றும் கூறியுள்ளது. அதைவிட பள்ளியானது மாணவனை பள்ளியின் நிறத்தில் தலைப்பாகையை அணியச் செய்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் அமர்ந்து பேசி சூழ்நிலைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று ஆராயவும் தீர்ப்பாயம் உத்தவில் குறிப்பிட்டுள்ளது. சித்தக்கின் உறவினர்கள் சிலரும் இப்பள்ளியில் படிப்பதாலும், வீட்டிற்கு அருகாமையில் பள்ளி இருப்பதாலும் சித்தக் அங்கேயே படிப்பதை தாங்கள் விரும்புவதாக மாணவனின் பெற்றோர் கூறினர்.