சபரிமலையில் தானியங்கி எந்திரம் மூலம் அரவணை, அப்பம் வினியோகம்

யு.பி.ஐ. மூலம் பணத்தை செலுத்தி பிரசாதத்தை பெறலாம்.
சபரிமலை
Published on: 

சபரிமலை,

சபரிமலையில் தானியங்கி எந்திரம் மூலம் அரவணை, அப்பம் வினியோக மையங்கள் திறக்கப் பட்டன. இவற்றில் யு.பி.ஐ. மூலம் பணத்தை செலுத்தி பிரசாதத்தை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தானியங்கி எந்திரங்கள்

சபரிமலையில் டிஜிட்டல் தொழில் நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் நிலக்கல்லில் வாகன நிறுத்த வசதி மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் பம்பை முதல் சன்னிதானம் வரை ஏ.ஐ. கேமராக்கள் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் தானியங்கி எந்திரங்களில் அரவணை, அப் பம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதனை நேற்று சன்னிதானத்தில் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

அதிகபட்சமாக 5 டின் அரவணை

தொடர்ந்து அவர் கூறுகையில், 'அரவணை விற்பனை கவுண்ட்டர்களில் கூட்ட நெரிசலை குறைக்கவும், பக்தர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், சபரிமலையில் 5 இடங்களில் தானி யங்கி எந்திரங்கள் மூலம் அரவணை வினியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் டிஜிட்டல் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை மூலம் ஒரு நபர் அதிகபட்சமாக 5 டின் அரவணை பிரசாதம் பெறலாம். மேலும் ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் 10 பாக்கெட் அப்பம் தானியங்கி எந்திரம் மூலம் வினியோகம் செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

X