சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு

சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு
Published on

ஸ்ரீநகர்,

உலகின் உயரமான போர்க்களம் என்று சியாச்சின் பகுதி வர்ணிக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 18ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த பனி படர்ந்த மலைப்பகுதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.

இந்த நிலையில், சியாச்சின் ராணுவ வீரர்கள் முகாம் அருகே திடீர் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த சில வீரர்கள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com